அனைவருக்கும் வணக்கம். நான் இப்பகுதியில் தற்போது உலக சாதனை வீரராக திகழும் USIAN BOLT பற்றிகூறவுள்ளேன்.முதலில் அவர் பற்றி சிறு குறிப்பு தர உள்ளேன்.
பெயர் :-Usain St. Leo Bolt
பிறந்த இடம் :- Trelawny , Jamaican
பிறந்த திகதி :- 21 August 1986
உயரம் :- 1.95m (6 ft 5 in)
நிறை :- 93.9kg (207 lb 14.59st)
விளையாட்டு :- Track and field
கழகம் :- Racer's track club, Kingston, Jamaica.
பிறந்த இடம் :- Trelawny , Jamaican
பிறந்த திகதி :- 21 August 1986
உயரம் :- 1.95m (6 ft 5 in)
நிறை :- 93.9kg (207 lb 14.59st)
விளையாட்டு :- Track and field
கழகம் :- Racer's track club, Kingston, Jamaica.
விளையாட்டு சாதனைகள் பற்றிய சிறு குறிப்புகள்
1.சொந்த சாதனைகள்:-100m-9.58s (உலக சாதனை, Berlin 2009)
(Personal record) 200m-19.19s (உலக சாதனை, Berlin 2009)
400m-45.28s (Kingston, 2007)
2.பதக்கப் பட்டியல் :
1. Olympic: - தங்கப் பதக்கம்-100m (Beijing2008)
தங்கப் பதக்கம்-200m (Beijing2008)
தங்கப் பதக்கம்-4*100m relay (Beijing2008)
2. World Championships: - தங்கப் பதக்கம்-100m (2009 Berlin)
தங்கப் பதக்கம்-200m (2009 Berlin)
தங்கப் பதக்கம்-4*100m relay (2009Berlin)
வெள்ளிப் பதக்கம்:-200m (2007 Osaka)
வெள்ளிப் பதக்கம்:-4*100m relay (2007 Osaka)
3. World Junior Championships: - தங்கப் பதக்கம்-100m(2002 kingston)
வெள்ளிப் பதக்கம்-4*100m (2002 kingston)
வெள்ளிப் பதக்கம்-4*400m relay (2002 Kingston)
4. World youth Championships: - தங்கப் பதக்கம்-200m(2003 Sherbrooke)
5 .World Athletics final :- தங்கப் பதக்கம்-200m(2009 Thessaloiki)


Bolt இன் ஆரம்ப காலங்கள்
Bolt 21 August 1986 ஜமேக்காவின் Trelawnyலுள்ள Sherwood Content எனும் சிறு நகரத்தில் பிறந்தார்.இவரின் பெற்றோர்கள் Wellesley & Jennifer bolt ஆவார்கள். இவருக்கு ஒரு சகோதரன்(sadeeki),ஒரு சகோதரி(Sherine) இருத்தார்கள். இவரது பெற்றோர்கள் சிறுபலசரக்குகடை ஒன்றைநடாத்தி வந்தார்கள்.ஆரம்பகாலத்தில் பொல்ட் தனது சகோதரனுடன் சேர்ந்து வீதியில் Cricket&football விளையாடுவதன் மூலம் பொழுதை போக்கினார். பிற்காலத்தில் "நான் சிறுவனாக இருந்த போது விளையாட்டை தவிர வேறு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை" என கூறினார். பொல்ட் சிறுவனாக இருந்தபோது"waldensia primary and all-age school" எனும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டார். இங்குதான் இவரின் மறைந்திருந்த திறமை முதன்முதலாக வெளிக்கொண்டுவரப்பட்டது. "The annual national primary-schools' meeting"ல் தனது பாடசாலை சார்பாக பங்குபற்றினார்.தனது 12வது வயதில் தனது பாடசாலையில் மிகவும் வேகமாக ஓடக்கூடியவராக திகழ்ந்தார்.பின்னர் பொல்ட் "william Knibb Memorial high school" எனும் உயர்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து இவர் ஏனைய விளையாட்டுகள் மீது கவனம் செலுத்தத்தொடங்கினார். ஆனால் இவருடைய கிறிக்கட் பயிற்சியாளர் இவரின் ஒட்ட வேகத்தினை அவதானித்து பொல்டை "track & field"உள் செல்ல ஊக்கமளித்தார். அதன்படி track & field உள் நுழைந்தார்.ஆரம்பத்தில் இவருக்கு முன்னாள் 100மீ ஒலிம்பிக் வீரர் Pablo McNeil உம் dwayne barrett உம் சேர்ந்து பயிற்சியளித்தனர். இவர்களினது ஊக்கமளிப்பின் முலம் தனது விளையாட்டு ஆற்றல்களை வளர்த்துக் கொண்டார்.2001ம் ஆண்டு பாடசாலையின் ஆண்டு விளையாட்டுப்போட்டியில் தனது 1வது பதக்க்த்தினை பெற்றார். இதில் அவர் வெள்ளிப்பதக்கத்தினை 200மீ போட்டியில் 22.04செக்.இல் ஓடிப் பெற்றார். இதன் பிற்பாடு Pablo McNeil பொல்டின் ஆரம்ப பயிற்சியாளராக பொறுப்பேற்றார். பின்னர் அதே ஆண்டு நடைபெற்ற"CARIFTA Games"ல் கலந்து கொண்டார். இதில் 400மீ போட்டியில் 48.28செக். இல் ஓடி வெள்ளிப்பதக்கத்தினையும்,200மீ போட்டியில் 21.81செக். இல் ஓடி வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். பொல்ட் 2001ம் ஆண்டு Hungary ல் உள்ள Debrecen ல் நடைபெற்ற "IAAF World Youth championchips"போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் முதன்முறையாக உலகத்தின் முன் தோன்றினார்.

Bolt's professional Athletics career

தொடர்ந்து 2006 மார்ச் மீண்டும் காயத்துகுள்ளானார்.இதனால் அவர் பங்கேற்க இருந்த 2006 commonwelth Games (melbourne) ல் இருந்து விலகிக்கொண்டார். மே மாதம் வரை இவர் எவ்விதவிளையாட்டுக்களிலும் ஈடுபடவில்லை. அதன்பிறகு அவருக்கு இணங்க்ககூடியவகையில் பிதிய பயிற்சிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து lausanne(Switzerland) இல் இடம்பெற்ற 2006 ற்கான "Athlettissima grand Prix" இல் கலந்துகொண்டார். இதில் 200மீ போட்டியில் 19.88செக். இல் ஓடி 3ம் இடத்தைப்பெற்றார். இவ்நேரமானது அவரின் புதிய சொந்தசாதனையாகப்(personal best) பதியப்பட்டது. இரண்டு மாதங்களின் பின்னர் ஜெர்மனியில் நடைபெற்ற "IAAF Athleics Final" போட்டியில் கலந்து கொண்டார். இதில் 200மீ தூரத்தை 20.10செக். களில் ஓடி 3ம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தைப் பெற்றார். இது இவரின் 1வது major world medal ஆகும். அடுத்ததாக கிறீஸில்(எதென்ஸ்) இடம்பெற்ற "IAAF world cup" ல் 200மீ தூரத்தை 19.96செக். களில் ஓடி வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு ஜமேக்காவில் இடம்பெற்ற Jamaican Championchips கலந்து கொண்டு 200மீ தூரத்தை 19.75செக். இல் ஓடினார். மேலும் 0.11செக். முன்பாக ஓடியதால் தேசியமட்ட சாதனையை(National record) நிகழ்த்தினார். இதுவரை காலமும் 200மீ,400மீ களில் மட்டும் கலந்துகொண்ட இவர் தனது பயிற்சியாளர் Mils இன் அறிவுறுத்தல்களின் படி 100மீ ஓட்டத்திலும் பங்குபற்றத்தொடங்கினார். அதன் பிரகாரம் crete (rethymno) இல் இடம்பெற்ற "23rd Vardinoyiannia meeting" லேயே முதன்முதலாக 100மீ ஒட்டத்தில் பங்குப்ற்றினார். ஆனால் பங்குபற்றிய 1வது போட்டியில் போட்டித்தூரத்தை 10.13செக். இல் ஓடி தங்கப்பதக்கத்தைப் பெற்றார். இதுவே இவரின் 1வது senior international silver medal ஆகும். முன்னேற்றத்தினை(acheivement) 2007ம் ஆண்டு ஜப்பானில்(Osaka) நடைப்பெற்ற world championchips லும் காட்டினார். அப்போட்டியில் 200மீ தூரத்தை 19.91செக். இல் ஓடி வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார். ஆனால் அவர் 2007ம் ஆண்டில் நடைபெற்ற major tournaments அனைத்திலும் எவ்வித தங்கப்பதக்கத்தையும் பெறவில்லை.
பொல்ட் தொடர்ந்து 100மீ இல் வளர்ச்சி கண்டார். இதை நிருபிக்கும்வகையில் ஜமேக்காவில் 2008 மே மாதம் 3ம் திகதி நடைபெற்ற "jamaica Invitational" இல் 9.76செக். இல் ஓடினார். முன்னால் ஓட்ட வீரர் Michael Johnson "குறுகிய காலத்தில் 100மீ போட்டிகளில் மிகச்சிறப்பாக செயற்படுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறேன்" எனதெரிவித்தார்.இவரது பயிற்சியாளர் மேலும் இவரால் சிறப்பாக செயற்படமுடியும் எனதெரிவித்தார். 2008 may 31, New york city ல் இடம்பெற்ற reebok Grand Prix இல்100மீ தூரத்தை 9.72செக். இல் ஓடி புதிய உலகசாதனை புரிந்தார். இதற்கு முன் 9.74செக். இல் ஓடி Asafa Powell (ஜமெக்கா) உலகசாதனை புரிந்தார். இதனை தொடர்ந்து 2008 எதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 100மீ,200மீ ஆகியவற்றில் கலந்துகொள்ள போவதாக அறிவித்தார்.இந்த ஓலிம்பிக் போட்டியே அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. அதன்படி 100மீ போட்டியில் முறையே 9.92செக்.,9.85செக். களில் ஓடி இறுதிச்சுற்றுக்கு தெரிவானார். இறுதிப்போட்டியில் போட்டித்தூரத்தை 9.69செக். இல் ஓடி புதிய உலகசாதனை புரிந்தார். உலகசாதனை புரிந்தார். இவ் ஒலிம்பிக் போட்டியிலேயே முதன்முறையாக இலத்திரனியல் நேரம்கணிப்பான்(Electronic timeing) அறிமுகப்படுத்தப்பட்டது. அதேவேளை 200மீ நடைபெறுவதற்கு முன் முன்னாள் ஜமேக்காவின் குறுந்தூரஓட்டக்காரர்(spriter) Don Quarrie கருத்துத் தெரிவிக்கையில் உலகசாதனையான 19.32செக். இனை பொல்ட் உடைத்து புதியசாதனை படைப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் சொன்னது போலவே200மீ போட்டியில் 19.30செக். இல் ஓடி அதிலும் புதிய உலகசாதனை புரிந்தார். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக் போட்டியில் 100மீ,200மீ ஆகிய இரண்டிலும் உலகசாதனை படைத்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார். உலக சாதனையான 200மீ முடிவடைந்த நேரத்தில் "Happy Birthday" என்ற வாசகம் மைதானம் முழுவதும் ஒளிப்பரப்பட்டது. அன்று அவரது 22வது பிறந்தநாள் ஆரம்பமானது
2 நாள் கழிந்து 4*100மீ அஞ்சலோட்டப்போட்டியில் அவரது அணியினர் 37.10செக். களில் ஓடி புதிய உலகசாதனை படைத்தனர். இப்போட்டியில் அவருடன் இணைந்து Nesta Carter,Mickael Fracter & Asafa Powell ஓடினர்.இதன்பிறகு உலகத்தை தன்பக்கம் ஈர்த்தார் பொல்ட். தனது வெற்றிகளைத்தொடர்ந்து china வில் 2008ஆம் ஆண்டு may 12ம் திகதி ஏற்பட்ட பூமியதிர்ச்சியால்(sichan earthquake) பாதிப்படைந்தோருக்கு US$50,000 நிவாரணமாக வழங்கினார். இதனைத்தொடர்ந்து பொல்ட் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் பொல்ட் ஊக்கமருந்து எதனையும் பாவிக்கவில்லை தீர்ப்பானது. ஒலிம்பிக் ஆரம்பிப்பதற்கு முன் 4 தடவை ஊக்கமருந்து சோதனைக்கு உற்படுத்தப்பட்டார்.ஓலிம்பிக்ற்கு பிறகு 2009 ஆண்டினை உற்சாகத்துடன் தொடங்கனார்.சூரிச்சில் இடம்பெற்ற 2009ற்கான IAAF Golden league இல் கலந்து கொண்டு 100மீ இல் 9.83செக். களில் ஓடினார். இப்மோட்டியின் நேரம் பொல்ட் ஜலதோசத்தினால்(cold) பாதிக்கப்பட்டிருந்தார். அடுத்து lausanne இல் இடம்பெற்ற Super Grand Prix இல் கலந்து கொண்டு 200மீ 19.63செக்.களில் ஓடிமுடித்தார். இவ்நேரம் அவரது 2வது அதிகூடிய நேரமாகப் பதியப்பட்டது. அப்பருவகாலத்தின் இறுதிப்போட்டியாகBrussels இல் இடம்பெற்ற Golden Leaque final இல் 100மீ போட்டியில் 9.77செக். இல் ஓடி 1ஆம் இடத்தைப்பெற்றார் இவ்நேரமானது track record ஆகப்பதியப்பட்டது.அதேவேளை இவர் 2008ற்கான IAAF Male Athletic of the year விருதையும், ஒலிம்பிக்கிற்கான சிறப்பு விருதையும் பெற்றார். 400மீ போட்டியிலும் உலகசாதனை படைக்கவேண்டும் என்பதே இவரது தற்போதய இலக்காக இருந்தது. எதிர்பாராத விதமாக 2009April மாதம் கார் விபத்தில் சிக்கினார். ஆனாலும் சிறிது காலத்தில் குணமடைந்து பழையநிலைக்கு திரும்ம்பினார். அதன்பிறகு 2009 ற்கான manchaster Great City Games இல் 150மீ போட்டியில் 14.35செக். இல் ஓடி புதிய உலகசாதனை படைத்தார். அடுத்து ஜமேக்காவில் இடம்பெற்ற Jaamaican National championchip இல் 100மீ ஐ 9.86செக்.இலும், 200மீ ஐ 20.25செக். இலும் ஓடி 1ஆம் இடத்தைப்பெற்றார்.
Julyமாதம் switzerland(Lausanne) இல் இடம்பெற்ற "Athletissima" வருடாந்த விளையாட்டுப்போட்டியில்(annuval meet) 200மீ ஐ 19.59செக். இல் ஓடினார். இவ்நேரமானது 200மீ போட்டி ஒன்றில் பெறப்பட்ட 4வது அதிகூடிய நேரமாகப் பதியப்பட்டது. இவ் வெற்றிக்களிப்போடு August மாதம் Germany(berlin) இல் 2009ற்கான World Championchip இல் கலந்துகொண்டார். அதிலும் தனது சாதனையைத்தொடர்ந்தார் பொல்ட். 100மீ போட்டியில் 1ஆம் சுற்றில் 9.89செக். களில் ஓடி இறுதிச்சுற்றுக்கு தெரிவானார். ஆனால் இறுதிச்சுற்றில் போட்டித்தூரத்தை 9.58செக். களில் ஓடி புதிய உலகசாதனை புரிந்தார். இவர் இத்தூரத்தை 37.58km/h ல் ஓடினார்.அதேவேளையில் 200மீ இன் இறுதிப்போட்டியில் யாருமெதிர்பார்க்காதவகையில் 19.19செக். களில் ஓடி அதிலும் புதியசாதனை புரிந்தார். இவரின் ஓட்டவேகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவதாக முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் shawn Crawford தெரிவித்தார்.அடுத்து இடம்பெற்ற 4*100மீ அஞ்சலோட்டப்போட்டியில் இவரது அணியினர் 37.31செக்.களில் ஓடி புதிய championchip record இனை படைத்தது. அதேவேளையில் இவ்நேரமானது 4*100மீ ஒன்றில் பெறப்பட்ட 2வது அதிகூடிய நேரமாகப்பதியப்பட்டது. இவ்வேளையில் பொல்ட் தொடர்ந்து 2வது முறையாகவும் IAAF World Athlete of the year விருதினை தன்வசமாக்கினார். முன்னாள் ஓட்ட வீரர்கள் Michael Johnson, DonQuarrie ஆகியோர் இவருக்கு மிகவும் பிடித்த வீரர்களாவார்கள்.இவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு Cricket ஆகும்.waqar Younis(former Pakistan's fast bowler), Sachin Tendulkar(indian batsman), Matthew Heyden(former opening batsman in Australia), chris Gayle(west indies's opening batsman) ஆகியோரின் தீவிர ரசிகராவார்.
BOLT’S ALBUM
இவரது மேலதிக படங்களைப்(image) பார்ப்பதற்கு இவ் இணைப்பை நாடுங்கள்.
BOLT’S VIDEOS
இவரது மேலதிக வீடியோ க்களைப் பார்ப்பதற்கு இவ் இணைப்பை நாடுங்கள்.
அவரது சொந்ந சாதனைகள்
போட்டி
|
நேரம்
|
இடம்
|
திகதி
|
சாதனை
|
100M
|
9.58sec
|
Berlin, Germany
|
16 August2009
|
WR&OR
|
150M
|
14.35sec
|
Manchester,
United Kingdom
|
17 May 2009
|
World best
|
200M
|
19.19sec
|
Berlin, Germany
|
20 August 2009
|
WR&OR
|
300M
|
30. 97sec
|
Ostrava, Czech Republic
|
27 May 2010
| |
400M
|
45.28sec
|
Kingston, Jamaica
|
5 May 2007
| |
4*100M
|
37.10sec
|
Beijing, China
|
22 August 2008
|
WR&OR
|
உங்களுக்குத் தெரியுமா?
USIAN BOLT பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இவ் இணைப்பை நாடுங்கள்.
மீண்டும் சந்திப்போம்…….
















